வெள்ளிக்கிழமை RBI வெளியிட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy படி, புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என 2016ல் பிரதமர் மோடி திடீர் லைவ் வீடியோவில் உலக மக்களுக்கு தெரிவித்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி மக்களுக்கு தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பிற ரூபாய் நோட்டுகளுக்கு மாற்ற அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ வலியுறுத்தியுள்ளது.

மேலும் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பு போல் 12 மணியில் இருந்து செல்லாது என அறிவிக்காமல், 2000 ரூபாய் நோட்டு தொடர்ந்து செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வழக்கம் போல் ரீடைல் சந்தையில் யாரும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டார்கள், வாங்க கூடாது என்பதற்கு எவ்விதமான தடையும் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வங்கிகளுக்கு புதிதாக 2000 நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பெறும் போது முக்கியமான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு சிக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பதை பிரத்தியேகமாக தெரிவித்துள்ளது.
மே 23, 2023 முதல் ஒரு முறை அதிகப்படியாக 20,000 ரூபாய் வரையில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். மக்கள் இந்தியாவில் இருக்கும் எந்த வங்கியிலும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வேறு டினாமினேஷன் கொண்ட ரூபாய் நோட்டுகளில் மாற்றிக்கொள்ளலாம் என ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதால் வங்கிகள் தான் 2000 நோட்டுகளை கலெக்ட் செய்யும் முகமாக உள்ளது. ஆர்பிஐ பிராந்திய அலுவலகத்திலும் இந்த சேவை உள்ளது.

முக்கியமான உத்தரவு: வங்கிகள் பெறும் அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் மக்களிடம் பெற்ற கையோடு Note Sorting Machines-ல் செலுத்தி அதன் உண்மைதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு அடிப்படையாக ஆர்பிஐ ஏப்ரல் 03, 2023ல் கொடுத்த மாஸ்டர் டைரக்ஷன்-ஐ முழுமையாக பாலோ செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளது.
Note Sorting Machines-ல் சோதனை செய்யும் போது ஏதேனும் கள்ள நோட்டு சிக்கினால், உடனே COUNTERFEIT NOTE என்று ஸ்டாம்ப் செய்ய வேண்டும். இதற்கும் பார்மேட் ஆர்பிஐ அனைத்து வங்கிகளுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது, இதேபோல் ஒவ்வொரு 2000 ரூபாய் நோட்டுகளும் ரெகார்ட் செய்யப்பட வேண்டும்.
மேலும் 2000 ரூபாய் கள்ள நோட்டு கொண்டு வருபவர்களுக்கு அந்த தொகைக்கு பணம் தர கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கள்ள நோட்டுக்கான தனி ரசீதும் வங்கிகளால் உரிய நபருக்கு வழங்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications