மக்கள் தங்கள் கையில் இருக்கும் ரூ.2,000 நோட்டை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு செப்டம்பர் 30, 2023 வரையில் கால அவகாசம் கொடுத்திருந்தது.
இந்த கால அவகாசத்தை அக்டோபர் 7 வரையில் நீட்டிக்கப்பட உள்ளதாக ஆர்பிஐ இன்று மாலை அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் 1, 2 தாண்டி சுமார் 5 நாட்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.

இதேபோல் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின்பு 2000 ரூபாய் நோட்டின் நிலைமை என்ன..? இன்னும் புழக்கத்தில் எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளது என்ற முக்கிய விபரத்தையும் ஆர்பிஐ இன்று வெளியிட்டு உள்ளது.
மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயில், செப்டம்பர் 29-ம் தேதி வணிகம் முடிவடையும் போது சுமார் 3.42 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது சந்தையில் வெறும் 0.14 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
இதன் மூலம் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 96% திரும்ப வங்கி அமைப்பிற்கு வந்துவிட்டன. ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவம், மாற்றுவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 07, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புழக்கத்தில் இருக்கும் 14000 கோடி ரூபாய் திரும்ப பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் வங்கி கிளைகள் உட்பட அனைத்து அரசு அமைப்புகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதையும் / பரிமாற்றம் செய்வதையும் நிறுத்தப்பட உள்ளது. ஆனால் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள் / நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ரூ.20,000/- வரை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு பின்பும் மாற்றிக்கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பின்பும் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகாரபூர்வ நாணயமாக கருதப்படும். இதன் மூலம் ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகள் சொல்லாது என்பதை கூறவில்லை என்பதை உறுதி செய்து, புழக்கத்தில் இருந்து மட்டுமே திரும்ப பெற்றுள்ளதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications