இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி மக்கள் தங்கள் கையில் இருக்கும் ரூ.2,000 நோட்டை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வங்கிகளில் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு கடைசி தேதி செப்டம்பர் 30, 2023.
இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில் சந்தையில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு..? மாற்ற முடியாத 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலை என்ன..? இது என்ன ஆகும்..?

மத்திய அரசு நவம்பர் 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கும் போது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ நாணயமாக பயன்படுத்த முடியாது என அறிவித்த கையோடு சந்தையில் போதுமான பணபுழக்கத்தை வேகமாக கொண்டு வர 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் 2018-19 ஆம் ஆண்டிலேயே 2,000 நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக மத்திய வங்கி தெரிவித்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கிளீன் நோட்டுக் கொள்கை கீழ் பொதுமக்களுக்கு நல்ல தரமான கரன்சி நோட்டுகள் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நாணயங்களை வழங்கும் முயற்சியின், 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டதற்கான நோக்கம் தீர்ந்த நிலையில் 2000 ரூபாய் நோக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் செப்டம்பர் 30, 2023 அன்று 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யத் தவறினால், அக்டோபர் 1, 2023 முதல் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாமல் போகலாம். இதில் பல மாற்று கருத்துக்கள் இருக்கும் வேளையில் கடைசி வாய்ப்பு அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதன் படி செப்டம்பர் 30, 2023க்குப் பிறகும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வசதியை ரிசர்வ் வங்கி வழங்கலாம், இருப்பினும், செப்டம்பர் 30 அன்று காலக்கெடுவுக்குள் ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ மாற்றவோ தவறியதற்கான காரணத்தைக் கேட்கலாம்.
எனவே, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது/டெபாசிட் செய்வது நல்லது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் படி மார்ச் 31 ஆம் தேதி சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது, மே 19 அதாவது 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக ஆர்பிஐ வெளியிட்ட நாளில் இது 3.56 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
இதற்கிடையில் தற்போது 3.14 லட்சம் ரூபாய் திரும்பபெறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளது வெறும் 42000 கோடி ரூபாய் மட்டுமே என ஆகஸ்ட் மாதம் அறிக்கை வெயிட்ட நிலையில் இன்னும் 25000 கோடி ரூபாய் எஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 நாட்களுக்குள் முழுமையாக வங்கி அமைப்பிற்குள் வருமா..?
அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுக்கள் அண்டை நாடுகளின் மத்திய வங்கியில் இருப்பது முக்கியமான விஷயம், இதுக்குறித்து இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை என்பது முக்கியமான விஷயம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications