இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டான 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்ததற்கான தேவை முடிவடைந்த நிலையில் கிளீன் நோட் பாலிசி கீழ் மொத்தமாக திரும்ப பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கை பணமதிப்பிழப்பு போல் அல்லாமல் செப்டம்பர் 30 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டு, அதுவரையில் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் அனைத்து இடத்திலும் 2000 ரூபாய் பயன்படுத்தப்படும். இந்த ஒரு வித்தியாசம் இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்ட நடவடிக்கை மூலம் டெபாசிட், கடன், நுகர்வு ஆகியவற்றில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ தனது அறிக்கையில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றதில் இந்தியாவில் நுகர்வு அதாவது consumption பிரிவில் சுமார் 55000 கோடி ரூபாய் அளவிலான தொகை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக அறிவித்த பின்பு தங்கம், நகை, ஏசி, மொபைல் போன், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் அதிகப்படியான தொகையை செலவு செய்துள்ளனர்.
இதேபோல் இந்தியா முழுவதும் இருக்கும் பெட்ரோல் பங்க்-களில் மக்கள் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுகளை செலவு செய்கின்றனர் என்பதை All-India Petroleum Dealers Association (AIPDA) அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக பெட்ரோல் பங்க்-களில் 40 சதவீத டிஜிட்டல் பேமெண்ட்களாக பெறுவார்கள், 2000 ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்பு 10 சதவீதமாக குறைந்துள்ளது.
இதேபோல் ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளில் பெரும்பாலான கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டு உள்ளது, இதேபோல் கேஷ் ஆன் டெலிவரிகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. சோமேட்டோவில் சுமார் 75 சதவீத கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதாக தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பொருட்கள் முதல் டைனர் மரச்சாமான்கள் வரையில் பலவற்றின் விற்பனையில் ஏற்றம் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கோயில்கள் மற்றும் பிற மத அமைப்புகளுக்கு 2,000 நோட்டுகள் மூலம் நன்கொடைகள் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 2000 ரூபாய் நோட்டு மூலம் பெறப்பட்ட 92000 கோடி ரூபாய் அளவிலான வங்கி டெபாசிட் தொகையில், சுமார் 55000 கோடி ரூபாயை மக்கள் திரும்பபெற்றுள்ளனர். இது கட்டாயம் நுகர்வோர் சந்தைக்கு தான் சென்றிருக்கும் என எஸ்பிஐ தனது அறிக்கையில் உறுதியாக தெரிவிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications