இந்தியாவில் அதிக மதிப்புடைய நாணயமாக இருக்கும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் 30 வரையில் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும்..?
2000 ரூபாய் நோட்டு ஏன் திரும்ப பெறப்பட்டது..? : 2016 ஆம் ஆண்டு ஒரே இரவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில், மக்கள் மத்தியில் போதுமான பணப்புழக்கம் உறுதி செய்யவும், வேகமாக பண தட்டுப்பாட்டை போக்கும் திட்டத்தில் 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது.

இதேவேளையில் இந்திய ரிசர்வ் வங்கி அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு 2000 ரூபாய் நோட்டை பிரின்ட் செய்வதை நிறுத்தியது. இதன் பின்பு படிப்படியாக 2000 ரூபாய் நோட்டின் புழக்கத்தை குறைத்து வந்த ஆர்பிஐ, தற்போது மொத்தமாக புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டை வெளியேற்ற அறிவுறுத்தியுள்ளது.
ஏன் இப்போது அறிவிக்கப்பட்டது..? : மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ 2000 ரூபாய் நோட்டை ஏன் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுகிறது..? இதற்கான காரணம் என்ன..? ஆகியவற்றை விளக்கவில்லை. ஆனால் பல சந்தை ஆய்வாளர்கள் கூறுகையில் அடுத்து மாநில மற்றும் பொது தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், பணப்புழக்கம் அதிகரிக்கும் இதனால் இதை கட்டுப்படுத்த சிறப்பான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என L&T Finance Holdings தலைமை பொருளாதார வல்லனர் ரூபா ரெஜி தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy படி, புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு குவாலிட்டியான ரூபாய் நோட்டுகளை பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கை தான் Clean Note Policy.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு அதிகமான காரணத்தால் தான் Clean Note Policy அடிப்படையில் 2000 ரூபாய் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக பிஸ்னஸ்டுடே ஆர்பிஐ அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2000 ரூபாய் அதிகம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளோருக்கு இது பெரும் சுமையாக இருக்கும்.
பொருளாதார வளர்ச்சி பாதிக்குமா..? : இந்தியாவில் சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது, இது மொத்த பணப்புழக்கத்தில் 10.8 சதவீதம். இதனால் நாணய புழக்கத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது, மேலும் 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு புழக்கத்தில் உள்ளது என பொருளாதார வல்லுநர் ரூபா ரெஜி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த 6-7 வருடத்தில் டிஜிட்டல் நிதி பரிமாற்றம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதால் இதில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. ஆனால் சிறு வர்த்தகங்கள், பணப்புழக்கம் அதிகமாக கொண்ட வர்த்தகங்களான விவசாயம், உரம், கட்டுமானம், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும்.
இதேவேளையில் 2000 ரூபாய் நோட்டுகளை அதிகம் வைத்துள்ளவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வேகமாக குறைக்க அதிக மதிப்புடைய பொருட்களை வாங்க கூடும். குறிப்பாக தங்கம் மீது அதிகப்படியான பணம் முதலீடு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது என QuantEco Research-ன் பொருளாதார வல்லுநர் யுவிகா தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு என்ன பாதிப்பு..? : 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கும் காரணத்தால் அடுத்த சில மாதங்களுக்கு வங்கி ஊழியர்களுக்கு அதிகப்படியான வேலை பளு இருக்கும். இதேவேளையில் வங்கியில் அதிகப்படியான பணம் டெபாசிட் செய்யப்படும் காரணத்தால் வங்கியின் நிதி நிலை மேம்படும், வங்கிகளின் நிதி புழக்கம் அதிகரிக்கும்.

யாருக்கு லாபம்..? : டிஜிட்டல் பண பரிமாற்ற சேவைகள் இனி நாட்டு முழுவதும் அனைத்து துறைகளிலும் கட்டாயமாகும். குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் டிஜிட்டல் பண பரிமாற்றம் முக்கியமானதாக மாறும். இது பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
கட்டணம் வருமா..? அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டை பயன்பாட்டில் இருந்து நீக்கும் போது, இனி சந்தை புழக்கத்தில் 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கும். இத்தகைய நிலையில் அனைவரும், அனைத்து விஷயங்களுக்கு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது.
இதனால் யூபிஐ முக்கியமானதாக அனைத்து மட்டத்திலும் மாறும், இத்தகைய நிலையில் மத்திய அரசு யூபிஐ சேவை மீது கட்டணம் விதித்தால் அனைவரும் செலுத்துவதை தவிர வேறு வழி இருக்காது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications