ரூ. 95,000 கோடியை 'ரீ-பண்ட்' செய்த வருமான வரித்துறை!
டெல்லி: பிடித்தம் செய்யப்பட வேண்டியதை விட அதிகமான வருமான வரி பிடிக்கப்பட்டிருந்தால் 4 வருடமானாலும் அதைக் கட்டியவருக்குத் திருப்பித் தர வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இப்போதைய நடைமுறையின்படி நாம் செலுத்த வேண்டியதை விட அதிக வருமான வரி கட்டியிருந்தால் அது தொடர்பான ஆவணங்களை 4 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்து ரீ-பண்ட் பெற வேண்டும். நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்டால் பணத்தைத் திருப்பிப் பெற முடியாது.
இந்த விதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீக்கியுள்ளது.
2011-12ம் ஆண்டில் மட்டும் வருமான வரித்துறை ரூ. 95,000 கோடியை வரி செலுத்தியோருக்கு ரீ-பண்டாகக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்த நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரூ. 16,900 கோடி ரீ-பண்ட் செய்யப்பட்டுள்ளது.
Share This Article
English summary
Refund excess tax despite 4 year limit period: CBDT to officials | ரூ. 95,000 கோடியை 'ரீ-பண்ட்' செய்த வருமான வரித்துறை!
Giving relief to taxpayers, the Income Tax Department has asked its officials to take action to refund excess tax even if such applications are hit by limitation period of four years. In 2011-12, the Income Tax Department had issued refunds of about Rs 95,000 crore, while the refunds in the first two months of the current fiscal totalled Rs 16,900 crore.
Story first published: Friday, June 22, 2012, 18:02 [IST]
Other articles published on
Jun 22, 2012