ஆயுள் காப்பீடு கட்டணம்- ஒரு பார்வை

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    ஆயுள் காப்பீடு கட்டணம்- ஒரு பார்வை
    என்னுடைய நண்பர் ஒருவர் அவரது எல்.ஐ.சி. ஏஜெண்ட்டிடம் தொடர்ந்தும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்.. பிரச்சனை என்னவெனில் நண்பர் செலுத்திய பணம் முழுவதுமே அவருடைய பாலிசிலியில் முதலீடு செய்யப்படவில்லை என்பதுதான்! அவர் செலுத்திய கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஏதொ ஒன்றின் பெயரில் கழிக்கப்பட்டிருப்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.

    இன்சூரன்ஸ் கணக்கீடு எப்படி?

    வாழ்நாள் பாலிசி எடுத்துக் கொண்டவர் நீங்கள் எனில் "Mortality Charge" என்பது உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். பெருமளவு ஒரு பிரிமீயத்தை நீங்கள் செலுத்தும் போது இந்த Mortality Charge என்பது கணக்கிடப்பட்டு அது தனியே வைக்கப்படும். இந்தத் தொகையானது பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினிக்கு அந்தத் தொகை வழங்கப்படும். இன்னொருவகையில் சொல்ல வேண்டுமானால் Mortality Charge என்பதுதான் உண்மையான பாலிசி கட்டணமாகும். பிரிமீயம் கட்டணம் என்பது பாலிசிதாரரின் வயது. பாலிசி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

    Mortality Charge என்பது பல்வேறு கட்டணங்களுடன் சேர்த்து வரவு வைக்கப்படுகிறது. அதனால் நீங்கள் செலுத்துகிற பிரிமீயத் தொகை முழுவதுமே முதலீடாக இருக்காது. ஏஜெண்ட் கமிஷன், நிர்வாக கட்டணங்கள் மற்றும் Mortality Charge ஆகியவும் கழிக்கப்படும். Mortality Charge என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்காது. உதாரணமாக பார்த்தோம் என்றால் இளைஞர் ஒருவர் குறைவான கட்டணத்தை செலுத்த நேரிடும். அதே நேரத்தில் முதியவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அவர்களின் வயதைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல்தான் பெண்களுக்கும் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதேபோல் நீங்கள் என்ன மாதிரியான பணி செய்கிறீர்கள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலிசிதாரர் ஒரு ஸ்டண்ட் மேன் என்றால் அவரிடம் "Mortality Charge" கூடுதலாக வசூலிக்கப்படும்.


    எல்.ஐ.சி என்பது நாட்டில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் காப்பீட்டு நிறுவனம். வாழ்நாளைப் பொறுத்தே Mortality Charge கணக்கிடப்படுகிறது. அனேகமாக அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுமே எல்.ஐ.சி.யின் கணக்கீட்டைத்தான் பின்பற்றுகின்றன. அதனால் பிரிமீயம் செலுத்துவோர் பொதுவான கட்டண மாற்றங்களை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

    ஆயுள் காப்பீடு என்பது உங்களையும் உங்களது குடும்பத்தையும் காப்பாற்றக் கூடிய ஒன்று. இந்த Mortality Chargeதான் உண்மயான இன்சூரன்ஸ் விலை. இதுவே உங்களுக்குப் பாதுகாப்பானதும்கூட என்பதை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    Life Insurance Policy has a cost- What exactly is it? | ஆயுள் காப்பீடு கட்டணம்- ஒரு பார்வை

    My friend almost had an argument with her Life Insurance agent the other day when he told her that the entire amount she pays as premium would not be invested in her policy. Little did she know that the agent wasn't really bluffing her - there indeed are charges that are deducted from the premium paid towards a Life Insurance Policy and among the most important of these is the Mortality Charge.
    Story first published: Tuesday, June 26, 2012, 18:34 [IST]
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more