இந்திய தனியார் துறையின் வளர்ச்சியானது ஜூன் மாதத்தில் முன்னேற்றம் கண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஹெச்.எஸ்.பி.எஸ். இந்தியா நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த முன்னேற்றமானது கடந்த மே மாதத்தில் 55.3 லிருந்து 55.7 ஆக அதிகரித்துள்ளது. சேவை துறையானது 54.3 விழுக்காட்டிலிருந்து 54.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அண்மைய 4 மாத புள்ளிவிவரங்களின்படி தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி விறுவிறுவென முன்னேற்ற கண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இந்த வளர்ச்சியானது உற்பத்தி மற்றும் சேவை துறைகள் இரண்டிலுமே காணப்படுகிறது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் உற்பத்தித் துறையின் வளர்ச்சி விரிவடைந்திருக்கிறது.
கடந்த 12 மாதங்களில் உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. சேவை துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி துறையில் ஆர்டர்கள் அதிகரித்து உள்ளன.
மொத்தம் 400க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகளிடமிருந்து 40 கேள்விகளின் அடிப்படையில் மாதந்தோறும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இத்தகைய புள்ளிவிவரத்தை ஹெச்.எஸ்.பி. இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications