'சின்ன வாடிக்கையாளர்'களை தொல்லையாக வங்கிகள் கருதக்கூடாது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பணம் கட்டாமல் வங்கிகளில் கணக்குத் தொடங்கும் நோ பிரில்ஸ் வாடிக்கையாளர்களை தொந்தரவாகக் கருதக் கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

பொதுவாக முன்னணி வங்கிகளின் மேலாளர்கள் சிறிய அளவிலான பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களைத் தொல்லையாகக் கருதுகின்றனர். பெரிய வங்கிகளானவை சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இடைத்தரர்களாக செயல்படுவதற்கேற்ப அவுட்சோர்சிங்கைப் போல கொடுத்துவிடுகின்றன. இதை நாம் பரிசீலித்து சீரமைக்க வேண்டியது அவசியம். இந்திய வங்கிகள் குறைந்த மதிப்பிலான வங்கிக் கணக்கு வைத்திருப்போரையும் குறைந்த அளவில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களையும் தொந்தரவாகக் கருதக் கூடாது குறிப்பாக நோ பிரில்ஸ் எனப்படும் பணம் கட்டாமலேயே வங்கிக் கணக்கு தொடங்குவோரை பெருந்தொல்லையாக கருதக் கூடாது.

வங்கிகளுக்கு வருமானத்தை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்குப் பதிலாக சிறிய தொகை, பெருந்தொகை என்று பார்த்து தவிர்ப்பது சரியானது அல்ல. புதிய கிளைகளை உருவாக்குவது, வங்கி சேவைகளுக்காக தொடர்பாளர்களை நியமிப்பது போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்,

சீனா, கென்யா மற்றும் மொராக்கோ நாடுகள் சமூகக் கட்டமைப்பின் கீழ்நிலையில் உள்ளவர்களைப் பற்றி கருத்தில் கொள்ளவில்லை. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 50வது இடம் இருக்கிறது

வங்கிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் வங்கி நடைமுறைகள் மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக் கூடியதாகவும் இருக்கவும் வேண்டும்."

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No-frills accounts aren’t a nuisance: D Subbarao | 'சின்ன வாடிக்கையாளர்'களை தொல்லையாக வங்கிகள் கருதக்கூடாது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Reserve Bank of India governor D Subbarao has berated banks for eschewing low-value customers and small transactions. The central bank chief said that India ranks 50th in financial inclusion—below countries like China, Kenya and Morocco—as banks fail to see opportunity at the bottom of the pyramid.
Story first published: Saturday, July 7, 2012, 11:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X