டெல்லி: இந்தியாவின் பொருளாதார சரிவு விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று உலகின் முன்னணி பொருளாதார வல்லுனர்களில் ஒருவரான மார்க் மோபியஸ் கூறியுள்ளார்.
பிராங்ளின் டெம்பிள்டன் சர்வதேச நிதி நிறுவனத்தின் மூத்த அதிகாரியான மார்க் அளித்துள்ள பேட்டியில்,
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளின் இப்போதைய பொருளாதார நிலையோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பிரம்மிக்க வைக்கிறது.
பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு காரணங்களால் தான் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பலன்களை விரைவிலேயே இந்த உலகம் பார்க்கும்.
மிக விரைவிலேயே இந்தியாவின் சரிவு நின்றுவிடும். மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இந்த தேசம் நடைபோடும்.
நீண்ட கால வளர்ச்சிக்கு இந்தியா செய்ய வேண்டிய முக்கியமான வேலை, பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தான். இதைச் செய்தால் தான் மத்திய அரசின் நிதி நெருக்கடிகள் குறையும்.
பணவீக்கம் தான் இந்திய வளர்ச்சியை பாதிக்கும் முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications