
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. 2011-12ம் கல்வியாண்டு மாணவர்கள் பலருக்கு இலவச லேப்டாப் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி, 4 செட் சீருடை, கலர் பென்சில், ஜியோமெடரி பாக்ஸ், அட்லஸ், இலவச நோட்டு புத்தகம் உள்பட மொத்தம் 14 வகையான உதவித் திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டன.
இதன் வினியோகத்தை கண்காணிக்க மூன்று மாவட்டத்திற்கு ஒருவர் என்ற கணக்கில் உதவி இயக்குனர் நிலையில் இருக்கும் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே இலவச பஸ் பாஸ் பலருக்கு கிடைக்கவில்லை. அரசு புதிய சீருடை அறிவித்தும் அதையும் பெற்றோர்கள் செலவு செய்து ஏற்கனவே வாங்கி கொடுத்துள்ளனர்.
அரசின் இலவசத் திட்டங்கள் மாணவ, மாணவியருக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications