விற்பனை ஆகாமல் உள்ள 2,300 மனைகளை விற்க வீட்டுவசதி வாரியம் முடிவு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை என்று பல்வேறு கோட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. தமிழகம் முழுவதும் 2,376 குடியிருப்பு மனைகள், 272 தனி வீடுகள், 20 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவற்றை தவணை மற்றும் மொத்த விலை முறையில் விற்பனை செய்ய வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. பல்வேறு கோட்டங்களில் திட்டமிடப்பட்ட 10,740 வீடுகளில் 1,886 கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றையும் விற்பனை செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
இந்த விற்பனை குறித்த அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications