டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாதான் எடுத்தார் என்று அத்துறையின் முன்னாள் செயலாளர் பெகுரா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விவகாரத்தை விசாரித்துவரும் பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜரான பெகுரா கூறியதாவது:
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது நான் அதே துறையின் செயலராக இருந்தேன். அதனால், அமைச்சகம், துறை ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. 2007-ம் ஆண்டு அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யும் முன்பு எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்த அடிப்படையில் ஒதுக்கீடு மேற்கொள்ளலாம் என ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது. அலைக்கற்றை ஒதுக்கீட்டை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்குவதற்கு முன் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்பட்டது.
அந்தத் தருணத்தில் 575 விண்ணப்பங்கள் அலைக்கற்றை உரிமம் கோரி வந்தன. அதிலிருந்து தகுதிவாய்ந்த நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான கடைசி நாள் 2007 அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு செப்டம்பர் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் 232-ஆக விண்ணப்பங்கள் சுருக்கப்பட்டன.
இந்த விஷயத்தில், மொத்தம் வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்குவதற்கு முடிவு செய்யலாம் என துறைச் செயலர் என்ற அளவில் நான் கருதினேன். ஆனால், அமைச்சராக இருந்த ராசா, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் அடிப்படையில் விண்ணப்பங்களைத் தேர்வு செய்யலாம் என்று கருதினார்.
இந்த விஷயத்தில்தான் எனக்கும் ராசாவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. ஆனாலும், அமைச்சர் என்ற முறையில் முடிவு எடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் இருந்தது. அது சரி என்றும் எனக்கு தோன்றியது என்றார் பெகுரா.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications