
கடந்த ஆண்டு செப்ட்ம்பர் மாதம் முதல் டாலருக்கு எதிரான நமது ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு சரிவை சந்தித்துவிட்டது. மேலும் உள்நாட்டிலும் தேவை குறைந்திருக்கிறது. இருப்பினும் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்ய வரிரத்து செய்யப்பட்ட்ருந்ததால் கணிசமாக இறக்குமதி நடபெற்று வந்தது.
ஆனால் இந்நிலைமை தொடர இயலாத வகையில் ரூபாய் மதிப்பு பெரும் சரிவை நோக்கிச் சென்றுவிட்டது. இந்த சரிவானது இறக்குமதி செலவில் எதிரொலித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரை 285 கோடி டாலருக்கு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மார்ச் மாதத்துக்குப் பிறகு இது பெரும் சரிவை எதிர்கொள்ள நேரிட்டது.
இதே நிலைமைதான் சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு வங்கதேசம் போல சீனாவிடமிருந்து வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இல்லாததும் ஒரு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.


Click it and Unblock the Notifications