முதலாவது காலாண்டில் நாட்டின் மறைமுக வரி வசூல் ரூ1.07 லட்சம் கோடி
டெல்லி: நடப்பு நிதி ஆண்டில் முதலாவது காலாண்டில் நாட்டின் மறைமுக வரி வசூலானது 13.8% வளர்ச்சியடைந்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவானதாகும்.
நடப்பு ஆண்டில் மறைமுகவரியானது ரூ1. 07 லட்சம் கோடியாகும். இது கடந்த முதல் காலாண்டு வரிவசூலைவிட கூடுதலானதாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 27 விழுக்காடு குறைவாகும். கடந்த 011-12-ஆம் நிதி ஆண்டில் மறைமுக வரி மொத்தம் ரூ.3,92,781 கோடியாகும்.
முதல் காலாண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ1,11 லட்சம் கோடி. இது நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தை விட 15 விழுக்காடு குறைவு. முதல் காலாண்டில் இதேபோல் இறக்குமதி வரி வசூல் 38,744 கோடி.உற்பத்தி வரி வசூல் ரூ.41,147 கோடி. சேவை வரி வசூல் ரூ.28,068 கோடி.


Click it and Unblock the Notifications