முகேஷ் அம்பானி நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கிய எல்ஐசி, சிங்கப்பூர் அரசு
டெல்லி: இந்திய அரசின் எல்ஐசி நிறுவனமும், சிங்கப்பூர் அரசும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கியுள்ளன. இதன் மூலம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் அளவு 7.09 சதவீதத்திலிருந்து 7.7 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல சிங்கப்பூர் அரசின் பங்கு அளவு 1.06 சதவீதத்திலிருந்து 1.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த காலிறுதி ஆண்டில் இந்த இருவரும் சேர்ந்து ரூ. 1550 கோடிக்கும் மேலான ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியுள்ளனர்.
தற்போதைய சந்தை விலைப்படி, எல்ஐசி நிறுவனம் கூடுதலாக வாங்கிய பங்குகளின் மதிப்பு ரூ. 1450 கோடியாகும். அதேசமயம், சிங்கப்பூர் அரசின் பங்குகள் மதிப்பு ரூ. 100 கோடியாகும்.
எல்ஐசி நிறுவனம் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ. 25.2 கோடி அளவுக்கு பங்குகளை வைத்துள்ளது. சிங்கப்பூர் அரசின் பங்கு ரூ. 3.94 கோடியாகும்.


Click it and Unblock the Notifications