
நாட்டில் சம்பளம் பெறும் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 முதல் ரூ.5 லட்சத்திற்கு இருந்தால், அவர்களின் சம்பள தொகையின் 10 சதவீதம் வருமான வரியாக செலுத்த வேண்டும். மேலும் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் பெறும் பணியாளர் 20 சதவீதமும், ரூ.10 லட்சத்திற்கும் மேலே ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரியும் செலுத்த வேண்டும்.
இதற்காக வருமான வரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, வருமான வரியில் விலக்கு அளிக்கப்படலாம். இதற்கான கடைசி நாள் வரும் 31ம் தேதி ஆகும்.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சரகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக சம்பளம் பெறுபவர்கள், வருமான வரி கோப்பு தாக்கல் செய்ய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சம்பளம் பெறுவோரில் சுமார் 85 லட்சம் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் உள்ளது. மேலும் அவர்களின் வங்கி வட்டி வீதமும் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications