2 மடங்காக உயரும் தீப்பெட்டி விலை

இந்தியாவில் பயன்படுத்தப்படும் தீப்பெட்டிகளில் பெரும்பாலானவை விருதுநகர், சாத்தூர், சிவகாசி,கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன் மொத்த விலையில் 600 தீக்குச்சிகள் கொண்ட ஒரு பண்டல் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு பண்டல் விலை ரூ.370க உயர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி விலை தற்போது இருமடங்காக அதாவது ரூ.2 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு முதல் கட்டமாக அசாம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் விலை உயருகிறது.


Click it and Unblock the Notifications