டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல் நிறுவனங்களை விட அதிக பாதிப்புக்குள்ளாகும் இன்போசிஸ்!

டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல் நிறுவனங்களை விட அதிக பாதிப்புக்குள்ளாகும் இன்போசிஸ்!
Infosys: Quotes, News
BSE 1051.85BSE Quote75.4 (-7.17%)
NSE 1051.40NSE Quote76.1 (-7.24%)
பெங்களூர்: ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக டிசிஎஸ், காக்னிசன்ட், எச்சிஎல் ஆகிய சாப்ட்வேர் நிறுவனங்களை விட இன்போசிஸ் தான் மிக அதிகமாக பாதிக்கப்படவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில காலாண்டுகளில் மற்ற நிறுவனங்களை விட இன்போசிஸ் கூடுதலாக வாடிக்கையாளர்களை (கிளையன்டுகள்) பிடித்துள்ளது. ஆனாலும் ஜூன் மாதத்தில் அந்த நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது.

மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடுவதற்காகவோ அல்லது தனது நிதி நிலைமையை சரி செய்து கொள்வதற்காகவோ இன்போசிஸ் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களைக் குறைத்திருக்கக் கூடும் என்றும் தெரிகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ. 2,900த்தைக் கடந்த இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு இப்போது ஓராண்டில் இல்லாத அளவுக்கு மிக மிகக் குறைவான விலையை அடைந்துள்ளது. இப்போதைக்கு அதன் மதிப்புகள் உயரவும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.

கடந்த இரு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வருவாயும், லாபமும் குறையத் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் நெருக்கடியான நேரத்திலும் டிசிஎஸ் நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+