'பொலபொலவென' உதிரும் ரூபாய் மதிப்பு.. மேலும் 43 பைசா சரிந்தது
மும்பை: ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்தவண்ணம் இருக்கிறது. இன்று ரூபாயின் மதிப்பு மேலும் 43 பைசா குறைந்து ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 55.75 ஆக இருந்தது.
ஜூலை 13ம் தேதிக்குப் பிறகு ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்தது இதுவே முதல் முறையாகும். சர்வதேச சந்தையில், யூரோ மற்றும் பிற நாட்டு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததே ரூபாயின் மதிப்பு வீ்ழ்ந்ததற்கு முக்கியக் காரணமாம்.
அமெரிக்க டாலர் வலுவடைந்ததைத் தவிர யூரோ மண்டலத்தின் தள்ளாட்டம், ஸ்பெயின் கடன் வாங்குதல் அதிகரிப்பு, உள்ளூர் ஈக்விட்டி சந்தையில் ஏற்பட்ட பலவீன தொடக்கம் ஆகியவையும் ரூபாய் மதிப்பு விழுவதற்கு முக்கியக் காரணங்களாகும்.
Share This Article
English summary
Rupee tumbles 43 paise against dollar | 'பொலபொலவென' உதிரும் ரூபாய் மதிப்பு.. மேலும் 43 பைசா சரிந்தது
The rupee fell by 43 paise to trade at 55.75, its lowest since July 13 against the dollar in early trade today at the Interbank Foreign Exchange as the American currency strengthened against euro and other currencies in the overseas market. Dealers said apart from strengthening of dollar overseas on fresh concerns over Spain's borrowing costs and the fate of the euro zone, a weak opening in the domestic equity market weighed on the rupee sentiment.
Story first published: Monday, July 23, 2012, 13:41 [IST]
Other articles published on
Jul 23, 2012