
2010-11ம் ஆண்டில் உலகெங்கும் சுமார் 70,000 நிறுவனங்கள் எச்1பி விசா கோரி அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பித்துள்ளன. இதில் 20 சதவீத எச்1பி விசாக்களை, 100 டாப் நிறுவனங்கள் தான் பெற்றுள்ளன.
இந்த 70,000 நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஒரே ஒரு எச்1பி விசாவை மட்டுமே கோரியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புரூக்ளின் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள விவரத்தின்படி, 2010-11ம் ஆண்டில் மிக அதிகமான எச்1பி விசாக்களைப் பெற்ற நிறுவனம் மைக்ரோசாப்ட் தான். இந்த நிறுவனம் 4,109 எச்1பி விசாக்களை பெற்றுள்ளது. இது மொத்த விசாக்களில் 1.26 சதவீதம் ஆகும்.
இரண்டாவது இடத்தில் இருப்பது டிசிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனம் 3,179 விசாக்களை வாங்கியுள்ளது. 3வது இடத்தில் டெல்லாய்ட் கன்சல்டிங் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்குத் தரப்பட்ட விசாக்கள் 2,981.
விப்ரோ 2,944, காக்னிசன்ட் 2,017, லார்சன் அண்ட் டியூப்ரோ 1,888, ஐபிஎம் இந்தியா 1,873, இன்போசிஸ் 1,842, இன்டெல் 1,510, ஐபிஎம் கார்ப்பரேசன் 1,468 எச்1பி விசாக்களைப் பெற்றுள்ளன.
ஆரக்கிள் 1,413, பிஜிட்சூ அமெரிக்கா 1,372, பட்னி அமெரிக்காஸ் 1,261, அக்சென்சர் 1,180, யுஎஸ்டி குளோபல் 1,133 எச்1பி விசாக்களை வாங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications