பெங்களூர்: நாட்டின் மூன்றாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ முதல் காலாண்டில் ரூ. 1,580.2 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 18.37% அதிகமாகும்.
நிறுவனத்தின் மொத்த வருவாய் 24.37% அதிகரித்து ரூ. 10,619.6 கோடியாகியுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 8,538.4 கோடியாக இருந்தது.
கடந்த 3 மாதங்களில் இந்த நிறுவனம் புதிதாக 37 வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
அதே நேரத்தில் ரூபாயின் மதிப்பு சரிந்ததால் டாலர் வருவாய் 1.36% சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த காலாண்டிலும் பெரிய அளவில் வருவாயும் லாபமும் உயர வாய்ப்பில்லை என்றும் விப்ரோ அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து இன்று பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகளின் விலை சரிந்தது.
இந் நிலையில் விப்ரோ தனது இந்திய ஊழியர்களின் ஊதியத்தை 8 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
Share This Article
English summary
Wipro consolidated Q1 net climbs 18%; outlook muted | விப்ரோ லாபம் ரூ.1,580.2 கோடி: 18.37% அதிகரிப்பு
Wipro Ltd shares fell 1 per cent on Tuesday after India's no. 3 software services exporter forecast subdued IT services sales for the current quarter. Wipro said earlier consolidated net profit rose to Rs 1,580 crore ($282.55 million) for the fiscal first quarter ended June 30 from Rs 1,335 crore a year earlier, meeting forecasts. The company forecast subdued IT services sales for the current quarter after posting an 18 per cent rise in quarterly profit that met market expectations on growth in outsourcing work.
Story first published: Tuesday, July 24, 2012, 12:06 [IST]