
இந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளதாவது:
2011ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதற்கு முந்தைய ஆண்டைவிட 16.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் ஏற்றுமதி 9.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வழக்கான சந்தைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தெற்காசிய நாடுகள் போன்ற புதிய சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் தான் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நாடுகள் இறக்குமதியைக் குறைத்துவிட்டன. ஆனாலும் மற்ற நாடுகளின் சந்தைகளை இந்தியா குறி வைத்து செயல்பட்டதால் அதன் ஏற்றுமதி குறையவில்லை.
2011ம் ஆண்டில் உலகளவில் மொத்த ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசிய நாடுகளின் ஏற்றுமதி மட்டும் 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆசிய பிராந்தியம்தான் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளதன் பின்னணியில் இந்தியாவும், சீனாவும்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகளவில் ஏற்றுமதியைப் பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகளள் தான் 78,900 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளன. இது, உலகின் மொத்த வணிக சேவைகள் ஏற்றுமதியில் 24.8 சதவீதமாகும். அடுத்தபடியாக அமெரிக்கா 18.2 சதவீத பங்குடன் 57,800 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே போல கடந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்தான் அதிக அளவில் இறக்குமதிகளையும் செய்துள்ளன. இந்த நாடுகளின் மொத்த இறக்குமதி 63,900 கோடி டாலராக உள்ளது. இது, உலக மொத்த இறக்குமதியில் 21.1 சதவீதமாகும். அடுத்தபடியாக அமெரிக்கா 39,100 கோடி டாலருக்கு இறக்குமதி செய்துள்ளது. அந்நாட்டின் பங்கு 12.9 சதவீதமாகும்.
சீனா 7.8 சதவீத பங்குடன் 4வது இடத்திலும், ஜப்பான் 5.4 சதவீத பங்குடன் 5வது இடத்திலும், இந்தியா 4.3 சதவீத பங்குடன் 5வது இடத்திலும் உள்ளது.
சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் இந்திய ஏற்றுமதியைக் காட்டிலும் அதிகம். எனவே சீனாவுடனான ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையே சந்தித்து வருகிறது.
சீனப் பொருளாதாரம் ஏற்றுமதியை பெரிதும் சார்ந்துள்ளது. அங்கு இறக்குமதியை காட்டிலும் ஏற்றுமதி அதிகமாக இருப்பதால் வர்த்தக உபரி நிலவுகிறது.
சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஆசியாவில் பொருளாதார பலத்தில் சீனா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இவ்வாறு உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications