சென்னை: தமிழ்நாட்டின் நெல்லை உட்பட 7 மாவட்டங்களில் 230 கறிக்கோழி பண்ணைகள் அமைக்க ரூ20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கால்நடை பராமரிப்புத் தொழிலுக்கு அடுத்த முக்கிய தொழிலாக விளங்கும் கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சங்கரன்கோவில் மண்டலம் என இரு புதிய கோழி பண்ணைத் தொகுப்பு மண்டலங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதன்படி, இந்த மண்டலங்களில் உள்ள 7 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் அவர்களின் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப ஆயிரம் முதல் 5 ஆயிரம் கறிக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக்கொள்வதற்காக ரூ.20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 230 பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நாட்டுக்கோழி பண்ணைகள்
திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில் நாட்டு கோழி வளர்ப்பினை ஊக்கப்படுத்த ரூ.2 கோடியே 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 250 கோழிகள் கொண்ட 35 பண்ணைகள் அமைக்கப்படும்.
மீனவர்களுக்கு கூடுதல் மண்எண்ணைய்
மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களால் உபயோகப்படுத்தப்படும் மண்எண்ணெயினால் இயக்கப்படும் வெளிபொருத்தும் எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகிற்கு மானிய விலையாக லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் அளிக்கப்பட்டு வந்த மண்எண்ணெயின் அளவை 200 லிட்டரிலிருந்து 250 லிட்டராக உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.37 லட்சத்து 25 ஆயிரம் செலவினம் ஏற்படும்.
இந்த ஆண்டு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 250 லிட்டர் மண்ணெண்ணெய் திட்டத்திற்காக ரூ.47 கோடியே 60 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களுக்கு கூடுதலாக ஒரு படகிற்கு 100 லிட்டர் வரை வெளிச்சந்தை விலையில் வழங்குவதற்கும் முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications