பருவமழை பொய்த்துப் போனதால் உள்நாட்டு உற்பத்தி 6 விழுக்காடாக குறையும் : மாண்டேக்சிங் அலுவாலியா

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
நாட்டின் பருவமழை பொய்த்துப் போய்விட்டது. அதனால் வறட்சி உருவாகும் நிலை இருக்கிறது. சில காரணங்களால் வேளாண்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். இதேபோல்தான் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையில் இருந்தும் நம்பிக்கை தரக்கூடிய பலமான அறிகுறிகள் ஏதும் இல்லை.
இத்தகைய நிலைமையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6 விழுக்காடாகக் குறைந்து போகும். இது 9 ஆண்டுகளில் மிகக் குறைவானது.
நாட்டில் வறட்சி என்பது இப்போதுதான் முதல்முறையாக ஏற்படுவது கிடையாது. வறட்சியால் பிரச்சனைகள் வரும்போது அதனை நம்மால் சமாளிக்க முடியும். வறட்சி ஏற்பட்டால் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து நிச்சயம் சமாளிக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications