
தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளதால் உணவு பொருட்களின் விலை கடந்த 6 வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் துவரை, பாசிப்பயிறுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. துவரைக்கான கொள்முதல் விலை ரூ.3,250ல் இருந்து ரூ.3,850கவும், பாசிப்பயிறு விலை ரூ.3,500ல் இருந்து ரூ.4,400கவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வெளிசந்தையில் பாசிப்பருப்பு 100 கிலோ மூட்டைக்கு ரூ.500ம், துவரம்பருப்பு மூட்டைக்கு ரூ.300ம் உயர்ந்துள்ளது.
பாசிப்பயிறு லயன் ரூ.4,900ல் இருந்து ரூ.5400ம், தஞ்சை பாசிப்பயிறு ரூ.4,700ல் இருந்து ரூ.5,200ம், கர்நாடகா பாசிப்பயிறு ரூ.4,800ல் இருந்து ரூ.5,300ம், ஆஸ்திரேலியா அவியல் பயிறு ரூ.6,000ல் இருந்து ரூ.6,600ம், பாசிப்பருப்பு லயன் ரூ.6,500ல் இருந்து ரூ.7,000ம், தஞ்சாவூர் பாசிப்பருப்பு ரூ.6,500ல் இருந்து ரூ.7,000ம் உயர்ந்துள்ளது. குல்பர்க்கா துவரை ரூ.5,300, பர்மா துவரை ரூ.4,600, துவரம் பருப்பு லயன் ரூ.7,500, உடைசல் துவரம் பருப்பு ரூ.6,500, பர்மா துவரம் பருப்பு ரூ.6,600 என உயர்ந்துள்ளது. இவைகள் சராசரி விலையை விட ரூ.200ல் இருந்து ரூ.300 வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications