மும்பை: இந்தியாவின் பொருளாதார நிலைமை கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையைப் போல் நிச்சயம் மீண்டு எழும் என்று எல்.ஐ.சி சேர்மன் மகோதரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆயுள் காப்பீட்டு துறையானது 1.9 % முதல் 4% வரையிலானது. இதில் எல்.ஐ.சியும் பங்களிப்பு செய்கிறது. கடந்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளைப் ப் போலவே தற்போது ஆயுள் காப்பீட்டுத் துறை சிறப்பான பாதையில் செயல்பட்டு வருகிறது. பொதுவாக பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. யூலிப் புராடக்ட்ஸ் போன்றவை வெகு அதிகமாக கவரப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் ஏற்படுகிற மந்த நிலையைப் போக்க சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம் மற்றும் முன்னேற்றத்தையும்கூட வளர்ச்சியாகவே நாம் கருதலாம். எல்.ஐ.சி. என்பது இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது பண மதிப்பு, பணவீக்க விகிதம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. எப்படியாக இருந்தாலும் கடந்த இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை நோக்கி நிச்சயம் செல்லும்.
பங்குச் சந்தையில் 10 முதல் 15 விழுக்காடு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டு ரூ45 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இலக்கு தீர்மானித்திருக்கிறோம். கடந்த ஆண்டில் யூலிப் சரியாக போகவில்லை. இந்த ஆண்டு பரவாயில்லை... நல்ல வருவாய் கிடைத்து வருகிறது என்றார்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications