உங்கள் பேஷன் இகாமர்ஸ் சைட் 'யெப்மி' இப்போது தமிழில்!

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் பேஷன் இகாமர்ஸ் சைட் 'யெப்மி' இப்போது தமிழில்!
டெல்லி: இந்தியாவின் முதலாவது பேஷன் இகாமர்ஸ் இணையதளமான Yepme.com இப்போது தமிழிலும் சேவையை தொடங்கியுள்ளது.

 

கடந்த மாதம்தான் தனது இந்தி சேவையை இது தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பிராந்திய மொழிகளிலும் யெப்மியின் சேவையைப் பெறலாம். இத்தனை மொழிகளில் இது வெளியாவதால் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பலனடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவின் பேஷன் துறையை மேலும் பரவலாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் யெப்மி இணையதளம், இந்தியா முழுவதும் பேஷன் தயாரிப்புகளை அனைவரும் எளிதில் பெறவும் உதவுகிறது. இதில் வாங்கப்படும் பொருட்களுக்குரிய பணத்தை பொருட்களை டெலிவரி செய்த பி்ன்னரே பெறுகிறார்கள் என்பது முக்கியமானது.

தரமான பொருட்களை, பொருத்தமான விலையில் வழங்குகிறது யெப்மி என்பது இன்னொரு முக்கிய அம்சம்.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆண்களுக்கான உடைகளை யெப்மி அறிமுகப்படுத்தியது. பின்னர் பெண்களுக்கான உடைகளை அது அறிமுகப்படுத்தியது. இதன் பிராண்ட் அம்பாசடராக நடிகை கங்கணா ரணவத் இருக்கிறார். இதுதொடர்பான அறிமுக விழாவின்போது கங்கணா ரணவத் யெப்மி பெண்கள் கலெக்ஷன் ஆடைகளை அணிந்து வ்ந்து அனைவரையும் கவர்ந்தார்.

பேஷன் மீது பற்று கொண்ட 21 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்குத் தேவையான அனைத்து விதமான பேஷன் பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை யெப்மி இணையதளம் வழங்குகிறது.

ஸ்டைலிஷ் கலெக்ஷன், ஸ்மார்ட் கேஷுவல்ஸ், அவுட்டோர் கேஷுவல், பார்மல் டிரஸ்கள், பார்ட்டி டிரஸ்கள், பியூசன் வகைகள் என விதம்விதமாக இங்கு உடைகள் உள்ளிட்டவை கொட்டிக் கிடக்கின்றன.

யெப்மி குறித்து அதன் தலைமை செயலதிகாரி விவேக் கெளர் கூறுகையில், சமீபத்தில்தான் எங்களது இந்தி இணையதளத்தைத் தொடங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களது பெண்கள் உடைகள் மிகவும் அபரிமிதமான வரவேற்புடன் அது விற்று வருகிறது. தற்போது பிராந்திய மொழிகளிலும் எங்களது சேவையைத் தொடங்கியுள்ளதன் மூலலம் தென் மாநிலங்களில் நாங்கள் முன்னணி இடத்தைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

பேஷன் துறையில் எப்போதுமே நல்ல வரவேற்பைத் தருவது தென்னகம்தான். எனவே தென் மாநில மொழிகளில் எங்களது இணையதளம் சேவையைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானதாக கருதுகிறோம்.

இந்தியாவின் எந்த மூலையில் வசிக்கும் யாரும் எங்களது http://www.yepme.com இணையதளத்திற்குச் சென்று அதன் மூலம் தங்களது ஆர்டர்களை செய்யலாம். கம்ப்யூட்டர் மட்டுமல்லாமல், மொபைல் போன்களிலிருந்தும் இந்த இணையதளத்தை அடையலாம். பொருட்களை உங்களிடம் டெலிவரி செய்த பின்னர் அதற்கான பணத்தைக் கொடுத்தால் போதும் என்றார்.

பேஸ்புக்கில் தற்போது யெப்மிக்கு 10.1 லட்சம் விசிறிகள் உள்ளனர் என்பது மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும். மேலும் உலக அளவில் 10 முக்கியமான பேஷன் இகாமர்ஸ் இணையதளங்களில் யெப்மியும் ஒன்று என்று இங்கிலாந்தின் டெய்லி மெயில் செய்தி கூறுகிறது.

நாட்டின் 90 சதவீத மாவட்டங்களில் யெப்மி தற்போது சேவையாற்றி வருகிறது. யெப்மியின் விற்பனையில் நாட்டின் 6 முக்கிய நகரங்களின் பங்கு 30 சதவீதமாகும். மீதமுள்ள 70 சதவீத விற்பனை பிற நகரங்களிலிருந்து வருகிறது. 49 சதவீத ரிப்பீட் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்திடம் உள்ளனர். இதன் மூலம் இந்த நிறுவனத்தின் தரமான சேவையைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Youth fashion eCommerce site Yepme.com now in Tamil | உங்கள் பேஷன் இகாமர்ஸ் சைட் 'யெப்மி' இப்போது தமிழில்!

After the successful launch of its website in Hindi last month, India’s first online fashion brand, Yepme.com is now just a click away in other regional languages too - Tamil, Telugu, Malayalam and Kannada to cater to a wide range of customers pan India. The brand has a non-metro focus. Yepme.com has a mission to democratize fashion in India by making its fashion products available across India on Cash on Delivery. Yepme.com is targeting the fashionistas and personality conscious people offering them apparel of high quality at affordable price tags.
Story first published: Wednesday, August 8, 2012, 10:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X