9%ல் ஆரம்பித்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.5% ஆக தேய்கிறது!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

9%ல் ஆரம்பித்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.5% ஆக தேய்கிறது!
நியூயார்க்: இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.5. சதவீதமாகவே இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பு மூடிஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்தது. பின்னர் அதை 6.5 சதவீதமாகக் குறைத்து, இப்போது 7 சதவீதமாக இருக்கும் என்று கூறி வருகிறது.

இந் நிலையில் பிரபல சர்வதேச பங்கு வர்த்தக நிறுவனமான சிஎல்எஸ்ஏ இந்திய வளர்ச்சி 5.5 சதவீதமாகவே இருக்கும் என்றது. இதே அமைப்பு சில மாதங்களுக்கு முன் இந்திய வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.

அதே போல சிட்டி வங்கியும் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை முதலில் 6.2 சதவீதம் இருக்கும் என்று கணித்துவிட்டு பின்னர் 5.4 சதவீதமாகக் குறைத்தது. மேலும் CRISIL அமைப்பும் தேசிய வளர்ச்சியை முதலில் 6.5 சதவீதம் என்று சொல்லிவிட்டு 5.5 சதவீதமாகக் குறைத்தது.

இந் நிலையில் மூடிஸ் நிறுவனமும் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதமாகவே இருக்கும் என்று கணித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் 9 சதவீத வளர்ச்சியை இந்தியா சந்தித்த நிலையில், இது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து 5.5 சதவீத நிலைமைக்குப் போய்க் கொண்டுள்ளது.

இந் நிலையில் நாடு முழுவதுமே பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாமல் போன நிலையில், சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், நாட்டின் வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிப்பதும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதும் பெரும் சவாலான விஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

It's raining GDP cuts; now Moody's joins the bandwagon | 9%ல் ஆரம்பித்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.5% ஆக தேய்கிறது!

Close on the heels of a GDP cut from Crisil and international brokerage houses, Moody's Analytics has cut India's growth forecast to 5.5 percent for this year, citing a lack of government or RBI action despite a broad-based slowdown, as well as a poor monsoon. Brokerage house CLSA had cut its forecast for Indian GDP growth to 5.5% for FY 2013, from its earlier projection of 6%. Earlier, Citi also cut India's GDP forecast to 5.4% from 6.2% for FY 2013. India's Central Bank, the RBI began the GDP growth estimates cut in its monetary policy review, pruning GDP growth forecast for the current financial year from 7.3% to 6.5% and hiked the inflation forecast from 6.5% to 7%. 
 On Tuesday, CRISIL Research cut India's real GDP growth forecast for 2012-13 to 5.5 per cent from its earlier forecast of 6.5 per cent. If the monsoon scenario gets worst, one can expect further downgrades from rating agencies.
Story first published: Thursday, August 9, 2012, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X