டெல்லி: நாட்டின் நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜுன் காலாண்டில் அன்னிய நேரடி முதலீடு 65 விழுக்காடு குறைந்து போயுள்ளது. ஏப்ரல்- ஜூன் காலாண்டில் ரூ464 கோடி டாலராக அன்னிய நேரடி முதலீடு உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் இதே காலாண்டில் 1,340 கோடி டாலராக இருந்தது. கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் நம் நாட்டில் 132 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இது 2011 -ம் ஆண்டு ஜுன் மாதத்தில் 573 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டில் அன்னிய முதலீடு 58 விழுக்காடு சரிவடைந்து 383 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் இந்த முதலீடு 904 கோடி டாலராக இருந்தது.
அன்னிய நேரடி முதலீடு தொடர்பான அரசின் கொள்கைகளில் சில குழப்பங்கள் இருப்பதாலேயே இத்தகைய தேக்கநிலை இருக்கிறது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து


Click it and Unblock the Notifications