
அவர் அளித்துள்ள பேட்டியில்,
ஒவ்வொரு விமான நிறுவனமும் ஒரே ஊருக்கு பலவிதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி தனது அறிக்கையை சமர்பித்துவிட்டது. விரைவில் அதை பொது மக்களுக்கு வெளியிடுவோம். இதன்மூலம் எந்த விமான நிறுவனம் ஏமாற்றுகிறது என்ற விவரம் மக்களுக்குத் தெரியவரும். அதே நேரத்தில் மத்திய அரசால் விமானக் கட்டணங்களை முறைப்படுத்த முடியாது.
ஏர் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான சேவைகள் நஷ்டத்தில் தான் இயக்கப்படுகின்றன. மொத்தம் 300 சேவைகளில் 3 மட்டுமே லாபகரமாக இயங்குகின்றன. மற்றவை எல்லாமே நஷ்டம் தான்.
2 மாதங்களுக்கு முன்பு வரை பைலட்களுக்கான டூட்டி சார்ட்டை சில மூத்த விமானிகள் தான் போட்டு வந்தனர். இப்போது அதை கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டோம்.
கடந்த ஆண்டு பைலட்களுக்கான ஹோட்டல் கட்டணமாக மட்டும் ரூ. 141 கோடியை ஏர் இந்தியா கட்டியுள்ளது. டாக்சி கட்டணமாக ரூ. 11 கோடியை செலவிட்டுள்ளனர். இதையெல்லாம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல ஏர் இந்தியா ஊழியர்களின் குடும்பங்களுக்கான இலவச டிக்கெட் பயன்பாட்டை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இப்போது ஏர் இந்தியா ஊழியர்களின் மருமகனுக்குக் கூட இலவச விமான டிக்கெட் உள்ளது. இதை நீக்க உள்ளோம். ஓய்வு பெற்ற பிறகும் குறைந்த கட்டண பயணம் அனுமதிக்கப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும்.
ஏர் இந்தியாவுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன என்பது ஏர் இந்தியாவுக்கே தெரியவில்லை. இத்தாலியின் மிலன் நகரில் ஏர் இந்தியாவுக்கு சொந்த கட்டடமே உள்ளது. ஆனால், கடந்த 20 வருடமான அங்கு ஒரு விமானத்தை கூட ஏர் இந்தியா இயக்கவில்லை.
உலகம் முழுவதும் ஏர் இந்தியாவுக்கு சொத்துக்களும் விலை மதிப்பில்லாத பெயிண்டுகளும் உள்ளன. இதில் சொத்துக்களின் மதிப்பு ரூ. 5,000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை இருக்கலாம். ஓவியங்களின் மதிப்பு மட்டும் ரூ. 350 கோடி இருக்கலாம். இது குறித்து கணக்கெடுக்க கமிட்டியை அமைத்துள்ளேன். 2 மாதத்தில் அது குறித்த விவரம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications