அடிமாட்டு விலையில் தக்காளி: கவலையில் விவசாயிகள்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதி விளைநிலங்களில் தக்காளி அதிக அளவு பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகள் தக்காளி மகசூல் எடுத்து வருகின்றனர். இங்கிருந்து நெல்லை மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி நெல்லை மாவட்டத்திற்கு் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ தக்காளி தற்போது ரூ.6 முதல் 8 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மகசூல் அதிகரித்துள்ளதால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications