நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அடுத்த ஆண்டிற்குள் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அணுமின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு அவர் கூறியதாவது,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றியதால் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
அடுத்த ஆண்டு(2013) குடியரசு தின விழாவின் கொடியேற்றத்தின் போது இந்த அணு மின் நிலையம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து கொண்டிருக்கும். 2வது அணு உலையின் மூலமும் மின் உற்பத்தி துவங்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு(2013) சுதந்திர தினத்துக்கு முன்பாக கூடங்குளத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலை அமைப்பதற்காக ஒப்பந்தம், இந்தியா-ரஷ்யா நாடுகள் இடையே கையெழுத்தாகி உள்ளது.
அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கூடங்குளம் அணு மின் நிலையம் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பூர்த்தி செய்துள்ளது. மென்நீர் உலைகளை இயக்குவதற்கான லைசென்சை பொறியாளர்கள் பெற்று உள்ளனர் என்றார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications