வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவனத்தில் முதன்முதலில் முதலீடு செய்தவர்களில் ஒருவரான பேபால் நிறுவன அதிபர் பீட்டர் தியல் தனது 20 மில்லியன் பேஸ்புக் பங்குகளை பெரும் லாபத்துக்கு விற்றுள்ளார்.
பேஸ்புக் நிறுவன பங்குகளை அவர் ஏன் விற்றார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கின் எதிர்கால வளர்ச்சி இனிமேல் தேய்மானம் தான், இனி அதை வைத்து பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது என்பதால் தான் பங்குகளை பீட்டர் விற்றுவிட்டார் என்று பேச ஆரம்பித்துள்ளனர் சிலர்.
கடந்த 2004ம் ஆண்டில் 5 லட்சம் டாலர்களை பேஸ்புக்கில் முதலீடு செய்தார் பீட்டர். சமீபத்தில் பேஸ்புக் தனது பங்குகளை வெளியிட்டு பொது நிறுவனமானது. ஆனாலும் அதன் பங்குகள் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகாமல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந் நிலையில் தனது 20 மில்லியன் பங்குகளையும் பீட்டர் விற்றுள்ளார். இத்தனைக்கும் அவர் பேஸ்புக்கின் இயக்குனர் குழுவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பங்கு விற்பனை மூலம் 1 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ. 5,200 கோடி) பீட்டர் லாபம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
Share This Article
English summary
PayPal co-founder sells out of foundering Facebook at VAST profit | பேஸ்புக் பங்குகளை மொத்தமாய் விற்றுவிட்டு 'தப்பிய' பேபால் நிறுவனர்
One of Facebook's first investors has bailed out of the firm and sold 20 million shares. PayPal billionaire Peter Thiel, one of Facebook's earliest investors and a member of its board, was among the insiders selling stock in the social network after a lockup expired last week, it has emerged. As one of Facebook's initial investors, he invested $500,000 in the company in 2004.Peter Thiel, one of Facebook's first investors. Today it was revealed he has sold over 20 million of his shares in the firm as its stock price plunges.
Story first published: Wednesday, August 22, 2012, 13:19 [IST]
Other articles published on
Aug 22, 2012