ரூ4 ஆயிரம் கோடியில் குஜராத்தில் தொழிற்சாலை- மோடியிடம் நேரில் தெரிவித்தார் சுசுகி

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சுசுகியை வளைத்துப் போட்ட நரேந்திர மோடி
அகமதாபாத்: இந்தியா வருகை தந்துள்ள ஜப்பானின் சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஒசமு சுசிகி குஜராத் முதல்வர் நரேந்திரமோடிய நேற்று அகமதாபாத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது ஜப்பான் தொழிலதிபர்கள் குஜராத்தில் முதலீடு செய்வதற்கு மிகவும் விருப்பமுடன் இருப்பதாக மோடியிடம் சுசுகி கூறியுள்ளார்.

ஹரியானாவின் மானேசரில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையை சுசுகி நிறுவனம் மீள இயக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில் குஜராத்தில் ரூ4 ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலையை தொடங்க விரும்புவதாகவும் சுசுகி நிறுவன தலைவர் மோடியிடம் கூறியிருக்கிறார். இந்த தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பாக சுமார் 500 பேருக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தியா வந்துள்ள சுசுகி, மானேசர் தொழிற்சாலை வன்முறையில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அண்மையில் குஜராத் முதல்வர் மோடி ஜப்பான் சென்றிருந்தார். அப்போது ஹோண்டா, டொயாட்டோ, நிசான், யமஹா ஆகிய நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து கொடுக்கும் நிறுவன பிரதிநிதிகள் 400க்கும் மேற்பட்டோரை மோடி சந்தித்துப் பேசியிருந்தார். சுசுகி நிறுவன தலைவர் சுசுகியையும் நேரில் சந்தித்து குஜராத்தில் தொழிற்சாலை அமைக்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Osamu Suzuki meets Modi; Maruti to set up skill centre in Guj | சுசுகியை வளைத்துப் போட்ட நரேந்திர மோடி

Maruti Suzuki India will set up a skill development centre in Gujarat, where it is investing Rs 4,000 crore to set up a manufacturing facility, even as it is trying to restore normalcy at its Manesar plant in Haryana.
 
Story first published: Saturday, August 25, 2012, 13:40 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns