ஆப்பிள் வழக்கின் தீர்ப்பு எதிரொலி- சாம்சங் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சி
சியோல்: காப்புரிமை விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திடம் சாம்சங் தோல்வியடைந்ததன் எதிரொலியாக சாம்சங் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. இன்றைய பங்குச் சந்தையில் 7 விழுக்காடு சரிவை அதாவது 12 பில்லியன் டாலர் இழப்பை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் எதிர்கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அப்படியே காப்பியடித்து சந்தைக்கு விடுகிறது சாம்சங் என்று வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் ரூ5500 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதன் எதிரொலியாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கொரிய பங்குச் சந்தையில் இன்று படுவீழ்ச்சியடைந்தன. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் சுமார் 12 பில்லியன் டாலர் இழப்பை அந்நிறுவனம் சந்தித்திருக்கிறது. அந்நாட்டின் மதிப்பின் படி 1.183 மில்லியன் வொன் இழப்பை எதிர்கொண்டிருக்கிறது.
இந்த வழக்கின் தீர்ப்பால் சாம்சங் நிறுவனத்தின் ஆண்டு வருவாயில் 4 விழுக்காடு குறையக் கூடும் என்றும் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Share This Article
English summary
Samsung loses $12 bln mkt value after Apple's legal victory | ஆப்பிள் வழக்கின் தீர்ப்பு எதிரொலி- சாம்சங் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சி
Samsung Electronics shares tumbled more than 7% on Monday, wiping $12 billion off the South Korean giant's market value, as Apple Inc's sweeping legal victory in their US patent battle raised concerns about its smartphone business - its biggest cash cow.
Story first published: Monday, August 27, 2012, 12:08 [IST]