
நாட்டில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயிக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல இடங்களில் உள்ள மண்டலங்களில் முட்டை கொள்முதல் அளவை வைத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நாமக்கலில் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 334 காசுகளாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயித்தது.
இந்த நிலையில் நேற்று கூடிய கூட்டத்தில் 6 காசுகள் அதிகரித்து, முட்டை கொள்முதல் விலையை 340 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை முட்டை கொள்முதல் விலை இவ்வளவு அதிகரித்து இல்லை. ஆனால் முட்டைக் கோழி மற்றும் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது முட்டை கோழி கிலோ ரூ.38க்கும், கறிக்கோழி கிலோ ரூ.69க்கும் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் காய்கறி விலை உயர்வு காரணமாக முட்டை நுகர்வோரின் அளவு அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டே புதிய விலை உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. முட்டை கொள்முதல் விலையில் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், முட்டை பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வட மாநிலத்தில் தொடர் மழை காரணமாக முட்டை நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மும்பையில் முட்டை கொள்முதல் விலை 338 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் 340 காசுகளும், கொல்கத்தாவில் 365 காசுகளும், பெங்களூரில் 328 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications