ஆகஸ்ட்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்விற்பனை பெரும் சரிவு

நடப்பாண்டில் கடந்த மாதம் மொத்தம் 54,154 வாகனங்கள் விற்பனையாகியிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவன வாகனங்களின் விற்பனையானது 91, 442 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு உள்நாட்டு விற்பனையானது 77,086 ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 50,129 ஆக குறைந்து போய்விட்டது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார்கள் உள்ளிட்ட அனைத்து கார்களுமே விற்பனையில் சரிவையே சந்தித்திருக்கிறது.
மாருதி சுசிகி நிறுவனத்தின் ஏற்றுமதியோ பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14,356 கார்களை ஏற்றுமதி செய்தது. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4,025 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 72 விழுக்காடு குறைவு என்பதாகும்.


Click it and Unblock the Notifications