
சிதம்பரம் கருத்து
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில், இந்திய அரசு வரையறுத்துள்ள அரசு அனுமதி வழித்திட்டத்திற்கு உட்பட்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தார் என்று மோடி எழுதியிருந்ததை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்திருந்தார்.
ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் குஜராத் முதல்வர் மோடியை இழுத்துவிடும் ப.சிதம்பரத்துக்கு குஜராத் மாநில பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரச்சினைக்குரிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையில்லாமல் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை சம்பந்தப்படுத்தி மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசுவது அவசியமற்றது. குஜராத் மாநில கனிமவள மேம்பட்டு கழகத்திற்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கிட வேண்டுமென கேட்கும் வாய்ப்பை கூட அளிக்காமல், நிலக்கரி சுரங்கங்களை, நியமன அடிப்படையில் அரசு ஒதுக்கீடு செய்தது என்று அவர்கள் மத்திய அரசு மீது குறை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications