விலைவாசி.. குழந்தைகளுக்கு சாக்லேட், நூடுல்ஸ், ஜாம் வாங்குவதை கூட குறைத்துவிட்ட இந்தியர்கள்!
மும்பை: இந்தியாவில் பணவீக்கத்தின் தாக்கம் மத்திய தர மற்றும் கீழ் நடுத்தர மக்களை பாதிக்க ஆரம்பித்துள்ளதன் எதிரொலியாக குழந்தைகளுக்கு சாக்லேட், நூடுல்ஸ் வாங்குவது கூட குறைந்துள்ளது.
இந்தப் பொருட்களின் விற்பனை மட்டுமல்லாமல், சாப்ட் டிரிங்ஸ் எனப்படும் பானங்களின் விற்பனையும் சரிந்துள்ளது.
பணவீக்கத்தால் வீடுகளின் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகமாகி வருவதாலும், இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடு காரணமாக ஆடம்பரமான மற்றும் தவிர்க்க முடிகிற செலவுகளை மக்கள் குறைக்க ஆரம்பித்துள்ளதையே இது காட்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
குறிப்பாக பிஸ்கெட், நூடுல்ஸ், ஜூஸ், வெண்ணெய், கெச்சப், குளிர்பானங்கள், சாக்லெட்கள், ஜாம், சூப் ஆகியவற்றின் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பிஸ்கெட் விற்பனை 4 சதவீதமும், நூடுல்ஸ் விற்பனை 11 சதவீதமும், வெண்ணெய் விற்பனை 7 சதவீதமும், பானங்கள் விற்பனை 12 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
அதே நேரத்தில் அரிசு, கோதுமை உள்ளிட்ட அடிப்படை உணவு தானியங்களின் விற்பனை சரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சாக்லேட் விற்பனை 15 சதவீதம் சரிந்துள்ளது.
Share This Article
English summary
Sales of non-essential food items like chocolates, soft drinks & noodles take a hit due to inflation | விலைவாசி.. குழந்தைகளுக்கு சாக்லேட், நூடுல்ஸ், ஜாம் வாங்குவதை கூட குறைத்துவிட்ட இந்தியர்கள்!
Indians are checking their spends on non-essential food items such as chocolates, biscuits, soft drinks and noodles as inflation and overall slowdown put pressure on their household budgets, two recent studies say.
Story first published: Monday, September 10, 2012, 12:41 [IST]
Other articles published on
Sep 10, 2012