
மும்பை: வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை குறைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கி துறைக்கு ரூ.17,000 கோடி கூடுதலாக நிதிப் புழக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி இன்று காலாண்டு மறு ஆய்வை மேற்கொண்டது. வழக்கம் போல ரிசர்வ் வங்கியிடமிருந்து பிற வங்கிகள் பெறும் டெபாஸிட் தொகைக்காக வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதேபோல் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் தொகையிலும் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கான கடன் விகிதத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது,
அதே நேரத்தில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதமானது (CRR) 0.25% குறைக்கப்பட்டு 4.5% ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கித் துறைக்கு ரூ17 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி புழக்கத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செப்டம்பர் 22-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் தொழில்துறையில் எந்த ஒரு உடனடி மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்டில் பணவீக்கம் 7.55 விழுக்காடாக உயர்ந்துள்ளது. நிதிநிலை அறிக்கையில் உள்நாட்டு உற்பத்தி இலக்கு 7.6 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழில் வளர்ச்சி 9 ஆண்டுகளில் இல்லாத அளவாக 6.5 விழுக்காட்டுக்கு இறங்கி விட்டது. தொழிற்சாலை உற்பத்தி விகிதமும் 0.1 விழுக்காட்டுக்கு அளவுக்கு குறைந்து விட்டது. ஏற்றுமதியும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பு உயர்வடைந்திருக்கிறது. பங்குச் சந்தைகள் ஏறுமுகம் கண்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications