
இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் விநாயகர் சிலைக்கு பூ மாலை அணிவித்து, வீட்டை பூவால் அலங்கரிப்பர். இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் என்று சாலையோர பூக்கடைகள் முளைத்தன.
தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று ரூ.200க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப் பூ இன்று காலை ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று பிச்சிப்பூவும் ரூ.175ல் இருந்து ரூ.350க உயர்ந்துள்ளது.
அதே சமயம் கோழிக்கொண்டை, கேந்தி, செவ்வரளி உள்ளிட்ட பூக்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கேந்திப் பூ கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது. வட மாவட்டங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பூக்களை அனுப்பி கேரளாவுக்கு அனுப்பும விவசாயிகளும், வியாபாரிகளும் போதிய விலை இல்லாததால் வேதனை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications