சிட்னி: ஸ்விட்சர்லாந்தின் தேசிய ரயில் நிறுவனத்தின் கடிகார டிசைனை ஆப்பிள் நிறுவனம் திருடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
சாம்சங் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனத்திற்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகள் அண்மையில் தான் பைசலானது. இந்நிலையில் ஆப்பிள் புது விவகாரத்தில் சிக்கியுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்தின் ஸ்விஸ் பெடரல் ரயில்வேஸ் நிறுவனம் ரயில் நிலையங்களில் வைத்துள்ள கடிகார டிசைனை ஆப்பிள் நிறுவனம் திருடி அதை ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படும் ஐஓஎஸ்6க்கு உபயோகித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ரயில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரெடோ கோர்மான் கூறுகையில்,
எங்கள் கடிகார டிசைனை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளதில் எங்களுக்கு பெருமை தான். இந்த கடிகார டிசைனின் உரிமை எங்களுடையது என்பதை ஆப்பிள் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டோம். கடந்த 1944ம் ஆண்டு ஸ்விஸ் ரயில் நிறுவனத்திற்காக டிசைன் செய்யப்பட்ட கடிகாரைத்தப் போன்ற ஒன்றை ஆப்பிள் பயன்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆப்பிளுடன் இணக்கமான உடன்பாடு செய்யவே ரயில் நிறுவனம் விரும்பும் என்றார்.


Click it and Unblock the Notifications