சென்னை: விமான நிலையத்தை தனியார் மயக்கமாக்குவதைக் கண்டித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் காலைமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து , விமானநிலைய ஊழியர்கள் மூன்றுநாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து இன்று காலையில் சென்னை விமானநிலையத்தில் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் கொல்கத்தா விமான நிலையத்திலும் காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.
விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து நடைபெறுகின்றது. நாடுமுழுவதும் 25 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக விமானப்போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications