ஸ்ரீநகர்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தாமதமானதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால்தான் மத்திய அரசு டீசல் விலையை உயர்வு மற்றும், மானிய விலை சிலிண்டருக்குக் கட்டுப்பாடு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய முடிவுகளை எடுத்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாகவே இத்தகைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தாமதமாகி வந்தன.
அந்த நிலைமையை நினைக்கனும்...
இந்த முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், கடந்த 1991-ல் ஏற்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம் என்பதை பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டி உள்ளார். அதாவது, அப்போது ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கையிருப்பில் இருந்த தங்கத்தை அடகு வைக்க நேர்ந்தது. கடந்த ஆண்டிலேயே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவை மத்திய அரசு தாற்காலிகமாக ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
300 எம்.பி.க்கள் ஆதரவு
மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களையும் கணக்கில் கொண்டால் 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்கு 273 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எங்களுக்கு அதற்கும் அதிக உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றார் அவர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications