
வீட்டு உபயோகத்திற்கான மானிய விலையில் சிலிண்டர்கள், ஆண்டிற்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மானிய விலை சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை எதிர்த்து, வரும் 1ம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொது செயலாளர் பவன் சோனி கூறியதாவது,
கியாஸ் சிலிண்டர்கள் மானியம் குறித்த மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் நுகர்வோரும், விநியோகஸ்தர்களும் பாதிக்கப்படுவார்கள். எங்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல், மத்திய அரசு இது போன்ற தவறான முடிவு எடுத்துள்ளது. இதன்மூலம் கள்ள சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் முறைகேடான வர்த்தகத்திற்கு இந்த அறிவிப்பு வழிவகுக்கும்.
நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட டெலிவரி ஆட்கள் உள்ளனர். ஒரு சிலிண்டரில் இருந்து அரசிற்கு ரூ.8 வருமானம் மட்டுமே கிடைக்கிறது என்றார்.
ஆனால் இது குறித்த இறுதி முடிவை எடுக்க தேசிய சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள சுமார் 1,200 விநியோகஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications