இந்தியாவில் 3 கிளைகளை மூடும் பார்க்லேஸ் வங்கி!
மும்பை: பிரிட்டனைச் சேர்ந்த பார்க்லேஸ் வங்கி இந்தியாவில் 3 கிளைகளை மூடவுள்ளது. அதில் பணியாற்றும் 40 பணியாளர்களையும் நீக்கவுள்ளது.
இந்தியாவில் 9 கிளைகளைக் கொண்டுள்ள இந்த வங்கி, தனது சேவையை சுருக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதையடுத்து ஆந்திராவில் ராஜமுந்திரி, மகாராஷ்டிராவில் அகமத்மநகர், குஜராத்தில் ஜூனாகத் ஆகிய நகர்களில் உள்ள தனது கிளைகளை மூடிவிட்டு அங்கு பணியாற்றும் 40 பேரையும் நீக்கவுள்ளது.
அடுத்த சில மாதங்களில் மேலும் சில கிளைகளயும் பார்க்லேஸ் மூடவுள்ளதாகத் தெரிகிறது. பிரிட்டனில் 4வது பெரிய வங்கி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்லேஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளால் இந்திய வங்கிகளுடன் போட்டியிட முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications