டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 6 சதவீதமாகவே இருக்கும் என்று அறிவித்துள்ளது சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச்.
4 நாட்களுக்கு முன்னர் தான் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் பொருளாதார மதிப்பீட்டு அமைப்பும்
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் முன்பு கணிக்கப்பட்டதைவிடக் குறைவாக 5.5 சதவீதமாகவே இருக்கும் என்று அறிவித்தது. இந் நிலையில் பிட்ச் நிறுவனமும் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளது.
முன்னர் இந்திய வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று பிட்ச் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத் துவக்கத்தில் இன்னொரு தர மதிப்பீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 5.8 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாகக் குறைத்தது. அதே போல எச்எஸ்பிசி 6.3 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்தது. ஸ்டாண்ட்ர்ட் அண்ட் சார்ட்டட் 6.2 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாகக் குறைத்ததும் நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications