டீசல் விலை உயர்வு: தமிழகத்தில் லாரி வாடகை 20 சதவீதம் அதிகரிப்பு-லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டீசல் விலை உயர்வு: தமிழகத்தில் லாரி வாடகை 20 சதவீதம் அதிகரிப்பு
நாமக்கல்: டீசல் விலை உயர்வை தொடர்ந்து தமிழகம் முழுவதும் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

கடந்த மாதம் 14ம் தேதி மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 20ம் தேதி நாடு தழுவிய பந்த் நடைபெற்றது. இதையடுத்து டீசல் விலை உயர்வை குறைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகையை 20 சதவீதம் உயர்த்த, தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி கூறியதாவது,

மத்திய அரசு டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய 20 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதுவரை டீசல் விலை குறைக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diesel price hike: 20 percent of lorry fare increase | டீசல் விலை உயர்வு: தமிழகத்தில் லாரி வாடகை 20 சதவீதம் அதிகரிப்பு

20 percent of lorry fare was increase in Tamil Nadu, after the diesel price hike in country, president of the Tamil Nadu Lorry owners association K.Nallathambi said.
Story first published: Thursday, October 4, 2012, 11:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X