சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.
10 ஆயிரத்து 718 அரசுப் பணிகளுக்காக ஜூலை மாதம் 7ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த நிலையில், அதை எதிர்த்து சின்னச்சாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் தேர்வு முடிவை நிறுத்தி வைக்கக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் வாதிடுகையில், பாதிக்கப்பட்ட 13 பேருக்கு புதிதாக தேர்வு நடத்தப்பட்டது என்று தெரிவித்தார். இதேபோல் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுவிட்டதால், எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறவே, தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications